டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை வன்முறை தொடர்பாக பத்திரிகையாளர் சங்கங்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தன.
இந்த மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த், ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
டிஜிட்டல் ஊடகத் துறையில், ரீல்களை உருவாக்குபவர்கள் மற்றும் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களை பத்திரிகையாளர்களாகக் கருத முடியுமா என்று டெல்லி காவல்துறை ஒரு பிரமாணப் பத்திரத்தில் கேட்டிருந்தது.
சிலர் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் போராட்டத்தில் பங்கேற்று முழக்கங்களை எழுப்பியதாக காவல்துறை குற்றம் சாட்டியது.
சில போராட்டக்காரர்கள் கேமராக்கள் மற்றும் மைக்களை பயன்படுத்தி பத்திரிகையாளர்கள் போல் நடித்தனர் எனவும் காவல்துறை கூறியிருந்தது.
நேற்று உச்சநீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வி. தினேஷ், அங்கீகரிக்கப்பட்ட ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் ஏழு பத்திரிகையாளர்களுக்கு எதிராக காவல்துறை நடத்திய அட்டூழியங்களை அந்த பிரமாணப் பத்திரம் விளக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
இதனிடையே இதுகுறித்து பேசிய நீதிபதிகள், டிஜிட்டல் தளங்களில் தங்களைப் பத்திரிகையாளர்கள் என்று கூறிக்கொள்பவர்களுக்கு, மற்ற அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் அதே சட்டப் பாதுகாப்பை வழங்க முடியுமா என கேள்வி எழுப்பினர்.
பத்திரிகையாளர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு, அவர்களின் தொழில்முறை அங்கீகாரம் மற்றும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் டிஜிட்டல் தளங்களில் ரீல்கள் மற்றும் கன்டென்ட் உருவாக்குபவர்கள் பத்திரிகையாளர் என்ற தகுதியைத் தங்களுக்கு தாங்களே வழங்கிக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்தனர்.
பத்திரிகையாளர்களின் நடமாடும் சுதந்திரம், ஜனநாயக உரிமைகள் மற்றும் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் காவல்துறையின் கடமை ஆகியவற்றுக்கு இடையேயான சமநிலை தொடர்பான அரசியலமைப்புச் சிக்கல்களையும் ஆராயப்போவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர். சுபாஷ் ரெட்டி தலைமையிலான உயர்மட்ட விசாரணைக் குழுவின் முன் பாதிக்கப்பட்ட தொழில்முறை பத்திரிகையாளர்கள் தங்கள் புகார்களை எழுப்பலாம் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்க காவல்துறை வரம்பு மீறிய