சிறப்புச் செய்தி

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷூக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

36 minutes ago 4 பார்வைகள்
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷூக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

தவெக கட்சியை சேர்ந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ, அந்த மாவட்ட ஆட்சியருக்கு தவறான நோக்கத்தில் குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார் எழுந்த நிலையில், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இதனைதொடர்ந்து, கள்ளக்குறிச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம்-1ன் பொறுப்பு நீதிபதி பானுமதி முன்னிலையில் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆஜர்படுத்தப்பட்டார்.

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷிடம் நடத்திய 5 மணி நேர விசாரணைக்குப் பிறகு நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷூக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தவெக எம்எல்ஏவை டிசம்பர் 11ம் தேதி வரை கடலூர் சிறையில் அடைக்க நீதிபதி பானுமதி உத்தரவிட்டார்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்