சிறப்புச் செய்தி

Live Updates: திருப்பரங்குன்றம் மலைத் தூணில் மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும்- ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு தகவல்

19 hours ago 23 பார்வைகள்
Live Updates: திருப்பரங்குன்றம் மலைத் தூணில் மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும்- ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு தகவல்

திருப்பரங்குன்றம் மலைத் தூணில் மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும்- ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு

சுப்பிரமணியசுவாமி கோவிலில் வைத்து பூஜை செய்யப்பட்ட தீபக் கொப்பரை மலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. பூஜையில் பங்கேற்ற நீதியரசர்கள் கையில் ஏந்தியபடி தீபக் கொப்பரையை மலைக்கு எடுத்துச் செல்கின்றனர்.

திருப்பரங்குன்றத்தில் குவியும் பக்தர்கள்...

இன்று மாலை தீபம் ஏற்றப்படவிருக்கும் நிலையில், திருப்பரங்குன்றத்தில் நடமாடும் மருத்துவக்குழு தயார் நிலையில் உள்ளது.

திருப்பரங்குன்றம் கோவிலுக்குச் சென்று ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு ஆலோசனை, மலைத்தூணில் தீபம் ஏற்ற ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் குழு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

திருப்பரங்குன்றம் மலைக்கு பாதுகாப்பு உபகரணங்களை தீயணைப்புத் துறை வீரர்கள் கொண்டு செல்கின்றனர்.

சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி உத்தரவால் இந்த தலைமுறை தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை காணும் பெரும் பாக்கியத்தை பெற்றுள்ளது- பக்தர்கள் நெகிழ்ச்சி

தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து இன்று காலை முதல் 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் திருப்பரங்குன்றத்திற்கு வருகை தந்தனர். அவர்கள் பழைய படிக்கட்டு பாதை வழியாக சென்றனர். முன்னதாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இஸ்லாமியர்களிடம் ஆதார் அட்டை உள்ளிட்ட விபரங்களை காண்பித்த பின்னரே அனுமதித்தனர். மேலும் வீடியோ பதிவும் செய்யப்பட்டது. மலையேறி சென்றவர்கள் தங்களை பற்றிய சுயவிபர குறிப்புகளையும் பதிவிட்டு சென்றனர்.

வெளியூர்களில் இருந்து அரோகரா கோஷமிட்டபடி திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றும் நேரம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மதுரை ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணாவுடன் நீதியரசர்கள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் ஆலோசித்து வருகின்றனர். இந்த ஆலோசனையில் மதுரை காவல் ஆணையம் ராஜேந்திரன், அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

தூத்துக்குடியில் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:- "இன்று பிற்பகல் நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் திருப்பரங்குன்றம் செல்கிறேன். நேற்று உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசை மிகக் கடுமையாக விமர்சித்தது. ஆட்சிக்கு வந்த ஆறு மாத காலத்திற்குள்ளேயே, ஒரு சட்டமன்ற உறுப்பினர் கைது, உச்ச நீதிமன்றத்தின் கடுமையான விமர்சனம் மற்றும் சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதில் உள்ள திறன் குறித்த கேள்விகள் என பல்வேறு சிக்கல்களைச் சந்தித்துள்ளது. எந்தத் தீபத்தை ஏற்றக்கூடாது என்று அரசு தடுத்ததோ, அதே தீபம் இப்போது உலகம் முழுவதும் ஒளிபரப்பப்படுகிறது. முருகப்பெருமானின் ஆசிகள் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள மக்களைச் சென்றடைகின்றன. முருகப்பெருமானின் சக்தி அளப்பரியது; தீபம் ஏற்றுவதைத் தடுக்க நிர்வாக அதிகாரத்தைப் பயன்படுத்திய செயல் கண்டிக்கத்தக்கது..." என்று தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து மலை மீதுள்ள தீபத்தூணை நோக்கி பூஜை பொருட்கள் புறப்பட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் மதுரை வருகை.

தீபத்தூணைச் சுற்றி மூங்கிலால் ஆன மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் இன்று மாலை தீபமேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தீபமேற்றுவதற்காக இந்துக்களும், சிக்கந்தர் தர்காவில் சிறப்புத் தொழுகை செய்வதற்காக இஸ்லாமியர்களும் மலை மீது ஏறத் தொடங்கினர்.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று தீபம் ஏற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடி உத்தரவிட்ட நிலையில் மலை முழுவதும் பாதுகாப்பு பணியில் CRPF வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பரங்குன்றத்திற்கு பாதுகாப்பிற்காக வந்த CRPF வீரர்களை வரவேற்ற பொதுமக்கள்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்