நடிகர் ஆர்யா நடிக்கும் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. சென்னை, நடிகர் ஆர்யா தற்போது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்கிறார். ராமநாதபுரம் பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.
இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இந்த போஸ்டரை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரில் நடிகர் ஆர்யா கருப்பு சட்டை, கருப்பு வேஷ்டி அணிந்து வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிறப்புச் செய்தி
இணையதளத்தில் வைரலாகும் ஆர்யா நடிக்கும் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!
Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்!
முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்
தொடர்புடைய செய்திகள்
கோவை மாணவன் அகிலன் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட வ...
27 minutes ago
3,000 கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு: கர்நாடகா ஏ...
56 minutes ago
மழைக்கால புகாருக்கு வாட்ஸ்அப் எண்- சென்னை மாநகராட்சி
1 hour ago