விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்ற இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்படாமலே இருந்தது. இதன் காரணமாக இந்தியன் 2 திரைப்படம் கைவிடப்பட்டதாகவே ரசிகர்கள் கருதினர்.
விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றி, லைக்கா நிறுவனத்துக்கு இந்தியன் 2 படப்பிடிப்பை மீண்டும் துவங்க உத்வேகம் அளித்தது. உதயநிதி ஸ்டாலினும் முயற்சிக்க படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இடையில் ராம் சரண் நடிக்கும் படத்தையும் ஷங்கர் இயக்கினார்.
25 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞரால் மாவீரர் நேதாஜிக்கு சிலை திறக்கப்பட்ட அதே நாளில் அந்தச் சிலையின் கீழே இந்தியன்-2 படப்பிடிப்பிற்காக நிற்கிறேன். மகத்தான மனிதர்கள், மகத்தான நினைவுகள்.
சிக்கல்கள் இல்லாமல் சரியாக திட்டமிட்டு இரண்டு படங்களின் படப்பிடிப்பையும் சரியாக திட்டமிட்டு நடத்திவருகிறார் இயக்குநர் ஷங்கர். இதனையடுத்து மீண்டும் சேனாபதியாக அவதாரமெடுத்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.
இந்த நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை முன்பு எடுக்கப்பட்ட படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் கமல்ஹாசன், 25 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞரால் மாவீரர் நேதாஜிக்கு சிலை திறக்கப்பட்ட அதே நாளில் அந்தச் சிலையின் கீழே இந்தியன் 2 படப்பிடிப்பிற்காக நிற்கிறேன். மகத்தான மனிதர்கள் , மகத்தான நினைவுகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
சிறப்புச் செய்தி
கலைஞரால் திறக்கப்பட்ட நேதாஜி சிலை.. இந்தியன் 2 கமல் பகிர்ந்த படம்!
Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்!
முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்
தொடர்புடைய செய்திகள்
அதிகாலை கைது - முதலமைச்சர் விஜய் உடன் பொருளாதார ஆய்வாளர் கலையரசன் ச...
27 minutes ago
ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிக்க முடிவு செய்துள்ளதா தவெக அரச...
57 minutes ago
நாளை 4வது டி20 போட்டி: நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் அதிரட...
1 hour ago