அமமுக வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் டிடிவி தினகரன்!
மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ள அமமுக வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நாளை அறிவிக்க உள்ளார்.பாஜக கூட்டணியில் திருச்சி மற்றும் தேனி ஆகிய தொகுதிகளில் அமமுக போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், இதுதொடர்பாக அமமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-அமமுக கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட G.கல்லுப்பட்டி, அருள்மிகு பட்டாளம்மன் திருக்கோயில் அருகே நாளை 24.03.2024, ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில், நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் தேனி மற்றும் திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதிகளின் வெற்றி வேட்பாளர்களை அறிவிக்க உள்ளார். அதன் தொடர்ச்சியாக தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தனது முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை டிடிவி தினகரன் தொடங்கவிருக்கிறார். அதற்கான விவரப்பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel