நம்பிக்கை வாக்கெடுப்பு: பாமக ஆதரவும் இல்லை, எதிர்ப்பும் இல்லை!

தமிழக வெற்றிக் கழக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் விலகி இருக்க விரும்புவதாக தருமபுரி பாமக எம்.எல்.ஏ. செளமியா அன்புமணி தெரிவித்துள்ளார். இதன்மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவும் இல்லை, எதிர்ப்பும் இல்லை என்ற நிலைப்பாட்டை பாமக எடுத்துள்ளது. சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் முன்மொழிந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர். அந்தவகையில் பாமக சார்பில் பேசிய செளமியா அன்புமணி, புதிய அரசுக்கு வாழ்த்து தெரிவித்து ஆதரவும் இல்லை, எதிர்ப்பும் இல்லை எனப் பேசினார்.



பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel