நீதி கிடைத்திட தலையிட வேண்டும்: சுஷாந்த் ராஜ்புத் சகோதரி பிரதமருக்கு வேண்டுகோள்

Views : 51

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14-ம்தேதி பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். ஆனால், எந்தவொரு தற்கொலை கடிதமும் அவரது இல்லத்தில் சிக்கவில்லை. மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக மும்பை போலீசார் தெரிவித்தனர். ஆனால், இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி, சுஷாந்த் மறைந்து ஒரு மாதம் ஆன பின்னர், சுஷாந்த் சிங் மறைவுக்கு நீதி வேண்டும் என்றும், சிபிஐ விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளியே வரும் என்றும், அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு கடிதம் எழுதினார். மேலும், எந்த காரணம் அவரை இந்த முடிவை எடுக்க வைத்தது என்பது குறித்தும் தனக்கு தெரிய வேண்டும் என்றும் கூறினார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என ரியா சக்ரபோர்த்தியை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான ரசிகர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், மூன்று நாட்களுக்கு முன் சுஷாந்த்தின் தந்தை கே.கே. சிங் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ராஜீவ் நகர் காவல் நிலையத்தில் ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட 6 பேர் மீது சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியதாக புகார் அளித்துள்ளார்.

கே.கே. சிங் தனது புகாரில் கடந்த 2019-ம் ஆண்டு சுஷாந்த் பாலிவுட்டில் நல்ல நிலையில் இருக்கும்போது ரியா சகர்போர்த்தியின் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் என் மகனிடம் அவர் வாழ்ந்த வீட்டில் பேய் நடமாட்டம் இருப்பதாக அவரிடம் கூறி அவரை அந்த வீட்டை காலி செய்யுமாறும் கூறியதாகவும், இது அவரது மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் சுஷாந்த் வங்கிக் கணக்கில் இருந்து 15 கோடி ரூபாய் அவருக்கு தொடர்பே இல்லாத ஆட்களுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், சுஷாந்த்தின் லேப்டாப், பணம், கிரெடிட் கார்டுகள், பின் நம்பர் ஆகியவற்றை ரியா குடும்பத்தினர் திருடிவிட்டதாகவும் கே.கே. சிங் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரையடுத்து ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட 6 பேர் மீது ராஜீவ் நகர் போலீஸார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தனர்.

இதனால் சுஷாந்த் மரண வழக்கு சூடு பிடித்துள்ளது. பீகார் போலீசார் ரியா சக்ரபோர்த்தியை தேடிவருகின்றன. மும்பை வந்துள்ள போலீசார் ரியாவிடம் விசாரணை நடத்திட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதற்கிடையில் ரியா பீகார் வழக்கை மும்பைக்கு மாற்ற வேண்டும் என உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். அதேவேளையில் பீகார் அரசு ரியாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.

மகாராஷ்டிர மாநில அரசு இந்த வழக்கில் சிலரை தப்பிக்க வைக்க முயற்சி செய்கிறது என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள முக்கிய தலைவர்கள் சிபிஐ-க்கும் வழக்கை மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளன.

இதனால் மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, சுஷாந்த் ரசிகர்கள் மாநில போலீஸ் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இந்த வழக்கை சிறப்பாக விசாரிக்கும் திறமை மாநில போலீசாரிடம் உள்ளது. ஏற்கனவே கொரோனா போரை முன்னின்று நடத்தி வரும் நிலையில், சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை அவர்களை அவமானப்படுத்துவதாகும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சுஷாந்த் சகோதரி ‘‘நீதி கிடைக்கித்த தலையிட வேண்டும்’’ பிரதமர் மோடிக்கு டுவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து சுஷாந்த் சகோதரரி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘நான் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் சகோதரி. இந்த வழக்கை உடனடியாக முழுவதுமாக ஆராய வேண்டும் என்று வேண்டுகொள் விடுக்கிறேன். இந்தியாவின் நீதித்துறை மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். நீதியை எதிர்பார்க்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


அதிமுக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம்! முதல்வர் பதவியில் எடப்பாடி!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp