நாடு முழுவதும் கூடுதலாக 34 நகரங்களில் 5ஜி சேவை... ஜியோ நிறுவனம் அறிவிப்பு

நாடு முழுவதும் கூடுதலாக 34 நகரங்களில் 5ஜி சேவை... ஜியோ நிறுவனம் அறிவிப்பு

Views : 1925

ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஜியோ இந்தியாவில் இணையப் புரட்சியை ஏற்படுத்திவருகிறது. தரமான 4 ஜி இணைய சேவையை வழங்கியதன் மூலம் இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமாக ஜியோ உருவெடுத்தது. தற்போது, ஜியோ நிறுவனம் அதன் பயனாளர்களுக்கு 5 ஜி சேவையை வழங்கிவருகிறது. இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஜியோ 5 சேவை வழங்கும் எல்லையை அதிகப்படுத்திவருகிறது.

நாடு முழுவதும் இன்றுமுதல் ஜியோ நிறுவனம் கூடுதலாக 34 நகரங்களுக்கு 5 ஜி சேவையை வழங்கவுள்ளது. அதில், தமிழ்நாட்டில் எட்டு நகரங்களில் 5 ஜி சேவை வழங்கப்படவுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் மொத்தமாக 30 நகரங்களில் 5 ஜி சேவை வழங்கப்படவுள்ளது. அதன்மூலம் இந்தியாவில் மொத்தமாக 365 நகரங்களில் தரமான 5 ஜி சேவையை ஜியோ நிறுவனம் வழங்கப்படவுள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே, சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், வேலூர், ஓசூர், திருப்பூர், ஈரோடு, தருமபுரி, தூத்துகுடி, கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர், கும்பகோணம், நாகர்கோவில், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, கோவில்பட்டி, பொள்ளாச்சி, புதுச்சேரியில் 5 ஜி சேவை வழங்கப்பட்டு வந்தது.

இன்றுமுதல், ஆம்புர், சிதம்பரம், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகாசி, திருச்செங்கோடு, விழுப்புரம் ஆகிய நகரங்களில் 5 ஜி சேவை வழங்கப்படவுள்ளது. இந்த நகரங்களிலுள்ள ஜியோ பயனாளர்கள் கூடுதல் கட்டணமின்றி ஒரு ஜி.பிக்கும் கூடுதலான வேகத்தில் இணைய சேவையைப் பெற முடியும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


JOIN IN TELEGRAM

ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி!

May 09, 2024 - 1 day ago
ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி! காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலை வருமான பரூக் அப்துல்லா பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-பிரதமர் மோடி ஓட்டுக்காக இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அவரை அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரத்தில் இருந்து விரட்ட வேண்டும்.முஸ்லிம்கள், இந்துக்கள் மத்தியில் திட்டமிட்டு பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். பிரதமர் பதவியில்

வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை!

Apr 15, 2024 - 3 weeks ago
வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை! தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் 17-ந் தேதியுடன் முடிவடைகிறது. பிரசாரம் முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட

நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்

Apr 25, 2024 - 2 weeks ago
நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார்