தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை- தேர்தல் ஆணையம் உத்தரவு

தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை- தேர்தல் ஆணையம் உத்தரவு

Views : 70

பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது.மேலும் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தலும் இந்த தேர்தலுடன் நடக்கிறது. இதைப்போல 12 மாநிலங்களில் காலியாக உள்ள 25 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இந்த காலகட்டத்தில் நடக்கிறது.

இந்த நாட்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நடத்தவோ, வெளியிடவோ தடை விதித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. குறிப்பாக முதல்கட்ட தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19-ந் தேதி காலை 7 மணி முதல் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறும் ஜூன் 1-ந்தேதி மாலை 6.30 மணி வரை இந்த கருத்துக்கணிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதைப்போல வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரத்தில் கருத்துக்கணிப்பு முடிவுகள், தேர்தல் ஆய்வுகள் தொடர்பான எந்த தகவல்களையும் ஊடகங்களில் வெளியிடவும் தடை விதித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.


JOIN IN TELEGRAM

வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை!

Apr 15, 2024 - 3 weeks ago
வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை! தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் 17-ந் தேதியுடன் முடிவடைகிறது. பிரசாரம் முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட

நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்

Apr 25, 2024 - 2 weeks ago
நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார்

ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி!

May 09, 2024 - 6 hours ago
ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி! காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலை வருமான பரூக் அப்துல்லா பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-பிரதமர் மோடி ஓட்டுக்காக இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அவரை அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரத்தில் இருந்து விரட்ட வேண்டும்.முஸ்லிம்கள், இந்துக்கள் மத்தியில் திட்டமிட்டு பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். பிரதமர் பதவியில்