கிரிக்கெட்டுக்கு தோனி, அரசியலுக்கு அண்ணாமலை - ராதிகா பேச்சு

கிரிக்கெட்டுக்கு தோனி, அரசியலுக்கு அண்ணாமலை - ராதிகா பேச்சு

Views : 55

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா மற்றும் சரத்குமாருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து வரவழைக்கப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டு, ராதிகாவுக்கு ஆண்டாள் கையில் வைத்திருக்கும் கிளி வழங்கப்பட்டது.

தொடர்ந்து கூட்டத்தில் பா.ஜ.க வேட்பாளர் ராதிகா பேசியதாவது:-இந்தியா முழுவதும் எங்கு சென்றாலும் மோடி ஜி.. மோடி ஜி.. கோஷம்தான் ஒலிக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் கடிவாளம் போட்ட மாதிரி மாறுபட்டு இருக்கிறது. பா.ஜ.க.வினர் அனைவரும் மதவாதிகள்; சிறப்பாக செயல்பட மாட்டார்கள், தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை என கூறுகின்றனர்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெளிவாக இருக்கிறார். அண்ணாமலை அரசியல் களத்தி தோனிபோல் சிக்சர்கள் அடிக்கிறார். இந்த மாதிரி சிக்சர்களை அரசியல் களத்தில் பார்த்ததில்லை. தமிழகத்தில் பா.ஜ.க.வின் மீது பயம் வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


JOIN IN TELEGRAM

வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை!

Apr 15, 2024 - 3 weeks ago
வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை! தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் 17-ந் தேதியுடன் முடிவடைகிறது. பிரசாரம் முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட

தினகரன் Vs தங்க தமிழ்ச்செல்வன்... தேனி தொகுதியில் முந்துவது யார்? - ஓர் அலசல்

Apr 14, 2024 - 3 weeks ago
தினகரன் Vs தங்க தமிழ்ச்செல்வன்... தேனி தொகுதியில் முந்துவது யார்? - ஓர் அலசல் தேனி மக்களவைத் தொகுதியில் ஏற்கெனவே போட்டியிட்டு வென்ற டிடிவி தினகரன், இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய தங்க தமிழ்ச்செல்வன், தவிர அதிமுகவில் புதுமுகமான நாராயணசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் இந்த மூவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவெனில், அதிமுக என்னும் கட்சிதான். டிடிவி தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் அதிமுகவில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகேதாட்டுவில் அணை கட்டப்படும் - சித்தராமையா

Apr 10, 2024 - 3 weeks ago
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகேதாட்டுவில் அணை கட்டப்படும் - சித்தராமையா “மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டப்படும்” என கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி கர்நாடகாவில் உள்ள பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சிகள்