தினகரன் Vs தங்க தமிழ்ச்செல்வன்... தேனி தொகுதியில் முந்துவது யார்? - ஓர் அலசல்

தினகரன் Vs தங்க தமிழ்ச்செல்வன்... தேனி தொகுதியில் முந்துவது யார்? - ஓர் அலசல்

  ஏப்ரல் 14, 2024 | 04:58 am  |   views : 247


தேனி மக்களவைத் தொகுதியில் ஏற்கெனவே போட்டியிட்டு வென்ற டிடிவி தினகரன், இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய தங்க தமிழ்ச்செல்வன், தவிர அதிமுகவில் புதுமுகமான நாராயணசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் இந்த மூவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவெனில், அதிமுக என்னும் கட்சிதான். டிடிவி தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் அதிமுகவில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், தேனி மக்களவைத் தேர்தல் களம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.




போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் யார்? - தேனி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பாக தங்க தமிழ்ச்செல்வன், அதிமுக சார்பில் நாராயணசாமி, பாஜக கூட்டணியில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக மதன் ஜெயபால் ஆகியோர் களத்தில் நிற்கின்றனர். கடந்த 2019-ம் ஆண்டு தமிழகத்தில் அதிமுக வென்ற ஒரு தொகுதி தேனிதான். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்தரநாத் களம் கண்டு வெற்றியைப் பதிவு செய்தார்.




திமுக சார்பாக தேனியில் களம் காணும் தங்க தமிழ்ச்செல்வன் ஏற்கெனவே தேனி மக்களவையில் களம் கண்டவர்தான். 2019-ம் ஆண்டு அமமுக சார்பாகப் போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வன் 1,44,050 வாக்குகள் பெற்று மூன்றாவது இடம்பிடித்தார். இந்தநிலையில், திமுகவில் இணைந்த அவருக்கு தேனியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் அவரை எதிர்த்து அமமுக சார்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எதிர்த்துப் போட்டியிடுகிறார். அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். ஆகவே, டிடிவி தினகரன் - தங்க தமிழ்ச்செல்வன் போட்டி என்பது ’குரு - சிஷ்யன்’ மோதலாகியுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.



Also read...  நெல்லை காங். தலைவர் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம்: 30 பேருக்கு சம்மன்




அதிமுக வேட்பாளர் நாராயணசாமி 40 ஆண்டுகளாக அதிமுக கட்சியில் இருக்கிறார். ஒன்றிய செயலாளராக இருந்தவருக்கு எம்பி சீட் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும், தங்க தமிழ்ச்செல்வன் போல் தொகுதி மக்களுக்கு அறிமுகமானவர் இல்லை. இப்போதுதான் தேனி மக்கள் இவரை அறிய தொடங்குகின்றனர். திமுக மீதான அதிருப்தி மற்றும் அதிமுக வாக்கு வாங்கியை அடிப்படையாகக் கொண்டு களமாடி வருகிறார். மேலும், புதிதாகப் போட்டியிடுவதால் தனக்கு எம்பியாகும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்னும் கோரிக்கையும் முன்வைத்து மக்களிடம் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.



1999-ம் ஆண்டு தேனியில் நடந்த மக்களவைத் தேர்தலில் டிடிவி தினகரன் அதிமுக சார்பாகப் போட்டியிட்டு வென்றிருக்கிறார். எனவே, அப்போது தொடங்கி தொகுதி மக்களுக்கு நன்றாக அறிமுகமானவராகத் தான் டிடிவி.தினகரன் இருக்கிறார். குறிப்பாக, இந்தத் தேர்தலில் வார்டு வார்டாக சென்று களப்பணி செய்து வருகிறார். இவருக்கு தேனி களம் பாசிட்டிவ்வாகத்தான் உள்ளது.



மாற்று கட்சியைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு என்பதால் திமுக உட்கட்சி அளவில் சிறு மோதல் இருக்கிறது என்னும் கருத்து சொல்லப்படுகிறது. இதனால், தேர்தல் பணிகளில் சுணக்கம் ஏற்படலாம். எனினும், திமுக சார்பாகக் களம் காணும் தங்க தமிழ்ச்செல்வன் ஏற்கெனவே இந்தத் தொகுதியில் போட்டியிட்டவர்தான். எனவே, மக்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் மற்றும் ஆளும் திமுகவின் சப்போர்ட் எனக் களம் இவருக்கு அணுக எளிமையாகவுள்ளது. குறிப்பாக, மாநில அரசின் திட்டங்களான உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம் ஆகியவற்றைக் கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.




தேனி மாவட்டத்தில் போடி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் மாம்பழ சாறு தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதேபோல் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துதல், வைகை அணையைத் தூர்வாருதல், கண்ணகி கோயில் செல்வதற்கான பாதையை அமைத்தல், ’திண்டுக்கல் - சபரிமலை’ ரயில்பாதைத் திட்டத்தைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொகுதியில் உள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர்கள் இதனைக் கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர். இருப்பினும் இக்கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையிலேயே உள்ளன. ஆகவே, அனைத்துக் கட்சிகளும் இதனை வாக்குறுதியாக அளித்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.



தேனி களத்தைப் பொறுத்தவரையிலும், ’திமுக, அதிமுக, அமமுக’ என மூன்று கட்சி வேட்பாளர்களுக்கும் தொகுதியில் நல்ல செல்வாக்கு இருப்பதால், களத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது. எனினும், ’தங்க தமிழ்ச்செல்வன் - டிடிவி தினகரன்’ இடையே கடுமையான போட்டி இருக்கும் என சொல்லப்படுகிறது.




ஆண்டிபட்டி, தேனி, உசிலம்பட்டி, சேடபட்டி போன்ற பகுதிகளில் முக்குலத்தோர் ஓட்டுகள் அதிகம் உள்ளன.அதனால், அதே சமூகத்தைச் சேர்ந்த இந்த இருவர் மத்தியில் ’டஃப் ஃபைட்’ இருக்கும். இந்தக் கடுமையான போட்டியில் மக்கள் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.




எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.




கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்.. புது வகையான காய்ச்சல் எல்லாமே கேரளாவில்தான் தொடங்குகிறது!

2024-05-07 12:11:44 - 1 hour ago

கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்.. புது வகையான காய்ச்சல் எல்லாமே கேரளாவில்தான் தொடங்குகிறது! கேரளாவில் மேற்கு நைல் காய்ச்சல் (வெஸ்ட் நைல் காய்ச்சல்) பரவத் தொடங்கியிருக்கிறது. திருச்சூர், மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு நைல் காய்ச்சல் பாதிப்பு இருப்பதை மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உறுதி செய்துள்ளார். அத்துடன், அனைத்து மாவட்டங்களிலும் உஷாராக


ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நாங்குனேரி எம்எல்ஏ ரூபி மனோகரனிடம் விசாரணை

2024-05-07 06:37:01 - 6 hours ago

ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நாங்குனேரி எம்எல்ஏ ரூபி மனோகரனிடம் விசாரணை நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நாங்குனேரி எம்எல்ஏ ரூபி மனோகரனிடம் போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளது. சாத்தான்குளம் தனியார் கல்லூரியில் ரூபி மனோகரனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. நெல்லை திசையன்விளை அருகே உள்ள தமது வீட்டின் அருகே ஜெயக்குமார் பாதி எரிந்த நிலையில் சடலமாக


ஜெயக்குமார் கொலை? பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்

2024-05-07 04:36:06 - 8 hours ago

ஜெயக்குமார் கொலை? பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூரை சேர்ந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் மாயமான நிலையில் அவரது வீட்டுக்கு பின்னால் உள்ள தோட்டத்தில் தீயில் எரிந்து கரிக்கட்டையான நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த


இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல - ம.பி உயர்நீதிமன்றம்

2024-05-06 13:03:36 - 1 day ago

இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல - ம.பி உயர்நீதிமன்றம் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் “மனைவியுடன் ஆண் கொள்ளும் இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல” என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. இது திருமண உறவில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து மீண்டுமொருமுறை அனைவரையும் பேசவைத்துள்ளது. தன் தீர்ப்பில் நீதிமன்றம், ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் திருமண உறவில் நடக்கும் இத்தகைய விஷயங்கள், பாலியல் வன்கொடுமை


நெல்லை காங். தலைவர் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம்: 30 பேருக்கு சம்மன்

2024-05-06 12:58:30 - 1 day ago

நெல்லை காங். தலைவர் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம்: 30 பேருக்கு சம்மன் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், நேற்று முன் தினம் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அவர் எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. தற்போது விசாரணை அதிகாரியாக காவல் துணை கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.


காங்., பிரமுகர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரண வழக்கில் திணறும் காவல்துறை!

2024-05-06 05:12:05 - 1 day ago

காங்., பிரமுகர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரண வழக்கில் திணறும் காவல்துறை! காங்., பிரமுகர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரண வழக்கில் திணறும் காவல்துறை : 8 தனிப்படைகள் அமைப்பு..!! நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், நேற்று முன்தினம் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். நேற்று உடற்கூறு ஆய்வுக்கு பிறகு அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இறப்பதற்கு முன்பு


பிளஸ்-2 தேர்வு முடிவுகள்: 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

2024-05-06 04:58:04 - 1 day ago

பிளஸ்-2 தேர்வு முடிவுகள்: 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர்.இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடந்தது.இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு


பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது: 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி

2024-05-06 04:57:12 - 1 day ago

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது: 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு இன்று காலை 9.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் வெளியிடப்பட்டது. வழக்கமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்தான் தேர்வு முடிவுகளை வெளியிடுவார்.