திருப்பதி:
திருப்பதியில் பக்தர்களின் சிரமத்தை போக்க தேவஸ்தானம் ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது.
அதன்படி டிசம்பர் மாதத்திற்கான ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது.
ஆன்லைனில் டிக்கெட் பெற்ற பக்தர்கள் 22-ந் தேதி மதியம் 12 மணிக்குள் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.
கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ஹர தீப அலங்கார சேவை டிக்கெட்டுகள் வரும் 21-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.
அதே நாள் மாலை 3 மணிக்கு மெய் நிகர் சேவை டிக்கெட் வெளியிடப்படுகின்றன. 23-ந்தேதி காலை 10 மணிக்கு அங்க பிரதட்சன டோக்கன்கள் வெளியிடப்பட உள்ளன.
சிறப்புச் செய்தி
திருப்பதி கோவிலில் ஆன்லைன் தரிசன டிக்கெட் !
Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்!
முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்
தொடர்புடைய செய்திகள்
வைகுண்ட ஏகாதசி- திருப்பதியில் 8 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு
12 minutes ago
செக்கானூரணி காவல் மரணம்: உடற்கூராய்வில் காயங்கள் இருந்தும் உரிய நடவ...
42 minutes ago
திருப்பரங்குன்றம் புறப்பட்ட நயினார்: நெல்லையில் தடுத்து நிறுத்தப்பட...
1 hour ago