நயன்தாரா கடந்த 2022ம் ஆண்டு விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வீடியோ நெட்ஃப்ளிக்சில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த வீடியோவில் நானும் ரவுடிதான் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட பல காட்சிகளை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் பதிவு செய்துள்ளனர்.
அந்த படத்தை பிரபல நடிகர் தனுஷ் தயாரித்திருந்தார். நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை தன்னை கேட்காமல் பயன்படுத்தியதற்காக தனுஷ் நயன்தாராவிடம் ரூபாய் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தார். ஆனால், நயன்தாரா தரப்பினர் தனுஷிற்கு பதிலடி தரும் வகையில் விளக்கம் அளித்திருந்தனர்.
இந்த நிலையில், நடிகை நயன்தாரா அவரது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் அந்த அவர்களது திருமண ஆவணப்படத்தை வெளியிட்ட நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் மீது தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நடிகர் தனுஷ் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் NETFLIX நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். தனது தயாரிப்பில் வெளியான 'நானும் ரவுடி தான்' திரைப்படத்தின் காட்சிகளை நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகியோர் தங்கள் திருமண வீடியோவில் அனுமதியின்றி பயன்படுத்தியதாக மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்புச் செய்தி
நயன்தாரா மீது வழக்கு தொடர்ந்த தனுஷ்.. நீதிபதி அதிரடி உத்தரவு!
Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்!
முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்
தொடர்புடைய செய்திகள்
மகா தீபத்தை தரிசிக்க திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்!
8 minutes ago
ஐக்கிய அரபு அமீரகத்தில் பேருந்து-லாரி மோதி கோர விபத்து - 11 பேர் உய...
39 minutes ago
வைகுண்ட ஏகாதசி- திருப்பதியில் 8 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு
1 hour ago