தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

பா.ம.க. தலைவராக அன்புமணி மீண்டும் தேர்வு

பொதுக்குழு கூட்டத்தில் பாமக தலைவராக அன்புமணி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாமக நிறுவனர் ராமதாசின் பிறந்தநாளில் அன்புமணி அவரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதையடுத்து, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ராமதாஸ், இனி பாமக தலைவராக அன்புமணி இருப்பார் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள விடுதியில் பாமக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், பாமக தலைவராக அன்புமணி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளராக வடிவேல் ராவணன், பொருளாளராக திலகபாமா மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான அறிவிப்பு பொதுக்குழுவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel