தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

வந்தே மாதரம் பாடலுக்கு பிறகு தேசியக்கொடி ஏற்றப்படும் - உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை

உயர்நீதிமன்றத்தின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது குறித்த அறிவிப்பு இல்லை.

வந்தே மாதரம் பாடல் பாடப்பட்ட பிறகு தேசியக்கொடி ஏற்றப்படும் என உயர்நீதிமன்ற கிளை மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

முதலில் வந்தே மாதரம் பாடலும், தேசியக்கொடி ஏற்றப்பட்டு விழா நிறைவடையும்போது தேசிய கீதமும் பாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது குறித்த அறிவிப்பு இல்லை.

தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்வுகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்தான் முதலில் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆகஸ்ட் 10-ந்தேதி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் நாளை கொடி கம்பத்தில் மூவர்ண தேசியக் கொடியை முதல்முறையாக ஏற்றி வைக்கிறார்.

சட்டசபையில் தீர்மானம் நிறைவேறிய நிலையில் உயர்நீதிமன்றத்தில் நாளை தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுமா? என்ற தெளிவான அறிவிப்பு எதுவும் இல்லை.

உயர்நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் வந்தே மாதரம், தேசிய கீதம் குறித்து மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel