Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 15 ஆகஸ்ட் 2026: பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை

பராபவ ஆண்டு, ஆடி-30 (சனிக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : திருதியை இரவு 8.35 மணி வரை பிறகு சதுர்த்தி

நட்சத்திரம் : பூரம் காலை 7.01 வரை பிறகு உத்திரம்

யோகம் : சித்த / மரணயோகம்

ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சனம். திருவண்ணாமலையில் ஸ்ரீ அருணகிரிநாதர் திருவிழா. நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி தபசுக் காட்சி, சுவாமி வெள்ளி விருஷப சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம்.

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை.

மேஷம் - பக்தி

ரிஷபம் - பாசம்

மிதுனம் - பணிவு

கடகம் - பண்பு

சிம்மம் - விவேகம்

கன்னி - பாராட்டு

துலாம் - மகிழ்ச்சி

விருச்சிகம் - உயர்வு

தனுசு - இன்சொல்

மகரம் - வெற்றி

கும்பம் - நன்மை

மீனம் - உதவி

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel