இந்த ஆதாரம் போதுமா?.. சட்டசபையில் கர்ஜித்த முதலமைச்சர் விஜய்
தமிழக சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் பதில் அளித்து பேசி வருகிறார். அப்போது, சர்க்காரியா கமிஷன் அறிக்கையை குறிப்பிட்டு முதலமைச்சர் விஜய் ஆவேசமாக பேசியதாவது:-
* 1970 களில் திமுக ஆட்சியில் வீராணம் திட்டத்திற்கு சத்யநாராயண பிரதர்ஸ் டெண்டருக்கு கமிஷன் கேட்டது தொடர்பாக ED அறிக்கை வைத்து முதலமைச்சர் விஜய் பேச்சை தொடங்கினார்.
* 25 ஆண்டுகளுக்கு முன்பே கலைஞரின் மருமகன் டெண்ருக்கு ரூ.29 லட்சம் தவணை முறையில் லஞ்சம். கலைஞர் கருணாநிதி மேல் எனக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது, நான் அமலாக்கத்துறை அறிக்கை தான் பேசுகிறேன். முதலமைச்சர் பதவியை கலைஞர் கருணாநிதி தவறாக பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை அறிக்கை அளித்துள்ளது.
* அரசியல் பாரம்பரியம் தெரியுமா சீனியாரிட்டி தெரியுமா என பேசுவோர் குறித்து தான் மக்களுக்கு எடுத்து சொல்கிறேன். சர்க்காரியா கமிஷன் எழுதிய புத்தகம் சட்டமன்ற நூலகத்தில் உள்ளது, அதை எடுத்து படியுங்கள்.
* ஆதாரத்தை பக்கத்திலேயே வைத்துக்கொண்டு தேடுவது தான் திமுகவின் பழக்கம். 7.5 முதல் 10 சதவீதம் வரை கட்சி நிதி திமுக பெற்றதாக அமலாக்கத்துறையை கூறியுள்ளது.
* கட்சி நிதியில் நேரடி பயனாளியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி இருந்ததாக ED அறிக்கையில் உள்ளது.
* திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பதவியை தவறாக பயன்படுத்தினார் என்றும் அறிக்கையில் உள்ளது.
* முன்னாள் அமைச்சருடன் பல ஐஏஎஸ் அதிகாரிகளும் ஊழலில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
* குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரி ரத்தீஷ் துபாயில் ஒளிந்து கொண்டிருப்பது ஏன்?
* திமுகவினர் எப்போது எதை செய்தாலும் குடும்பமாக தான் செய்வார்கள்.
* செய்யும் தவறையே முறையாக செய்யும் வகையில் விஞ்ஞான ஊழலில் ஈடுபட்டுள்ளனர்.
* மதுபாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை கூடுதலாக ஊழல் வசூலித்ததை முறையாக செய்துள்ளனர்.
* ஆதாரம் வேணும் ஆதாரம் வேணும் என சொல்வோர்களுக்கு தற்போது ஆதாரம் போதுமா?.
* திமுக இருக்கும் இடத்தில் தான் தவறு நடக்கும், தவறு நடக்கும் இடத்தில் தான் திமுக இருக்கும்.
* ஊழல் செய்வோர் தான் ஆதாரம் கேட்பர், ஊழலே செய்யாதோர் அமைதியாக இருப்பார்கள் என்று ஆவேசமாக பேசினார்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel