ஆஸ்திரேலியா `ஏ' அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்தியா `ஏ' அணியில் ஹர்திக் பாண்ட்யா
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. இவர் கடைசியாக ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். அதன்பின் காயம் காரணமாக இந்திய அணியில் இடம் பெறவில்லை.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா `ஏ' அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட இந்தியா வருகிறது. பாண்டிச்சேரியில் போட்டிகள் நடைபெற இருக்கிறது.
இதற்கான இந்தியா `ஏ' அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிக்கான இந்தியா `ஏ' அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம் பிடித்துள்ளார். அவர் உடற்தகுதிக்கு உட்பட்டு அணியில் சேர்க்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை தொடர் தொடங்குவதற்கு முன் உடற்தகுதியை நிரூபிக்கவில்லை என்றால், களம் இறங்குவது சந்தேகம்தான்.
டெஸ்ட் போட்டி செப்டம்பர் 22-ந்தேதியும், செப்டம்பர் 29-ந்தேதியும் தொடங்குகின்றன. ஒருநாள் போட்டி அக்டோபர் 6, 9 மற்றும் 11-ந்தேதிகளிலா் நடக்கிறது.
ஒருநாள் தொடருக்கான இந்தியா `ஏ' அணிக்கு தேவ்தத் படிக்கல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சாய் சுதர்சன் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேவ்தத் படிக்கல் (கேப்டன்), சாய் சுதர்சன் (துணைக்கேப்டன்), அமன் மொகாடே, ஆயுஷ் பாண்டே, யாஷ் ரதோட், ஷெய்க் ரஷீத், குமார் குஷாக்ரா (வி.கீ.), ஷாம்ஷ் முலானி, தனுஷ் கோட்டியான், துஷார் தேஷ்பாண்டே, அன்ஷுலா் கம்போஜ், பிரபுல் ஹிங்கே, என். ஜெகதீசன் (வி.கீ.), நச்சிகேட் புதே, வி.வைசாக்.
ருதுராஜ் கெய்க்வாட் (கே), தேவ்தத் படிக்கல் (துணைக் கேப்டன்), பிரியான்ஷ் ஆர்யா, சாய் சுதர்சன், ரஜத் படிதார், குமார் குஷாக்ரா (வி.கீ.), நிஷாத் சிந்து, விப்ராஜ் நிகம், அர்ஷின் குல்கர்னி, அர்ஷத் கான், நேமன் திர், ஹர்திக் பாண்ட்யா, பிரப்சிம்ரன் சிங் (வி.கீ.), குர்ஜப்நீத் சிங், யாஷ் தாகூர்.
இதற்கிடையே செப்டம்பர் 27-ந்தேதி முதல் அக்டோபர் 3-ந்தேதி வரை இந்திய சீனியர் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel