தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

தொழில்துறை அமைச்சரின்றி தொழிற்பயணம்: யாரை பார்க்கச் சென்றார் என முதலமைச்சர்தான் கூற வேண்டும் - நயினார் நாகேந்திரன்!

திருநெல்வேலியில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்.,

“சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. சட்டசபையில் நடந்தவற்றை மக்கள் பார்த்துள்ளனர். பல்வேறு சபாநாயகர்களை இந்த சட்டமன்றம் பார்த்துள்ளது.

கடந்த காலங்களில் பல இனம், பல மதங்களை சேர்ந்தவர்கள் சபாநாயகர்களாக பணியாற்றிய நிலையில், இன்று மதம் சார்ந்த ஒரு சபாநாயகர், மதம் சார்ந்த அமைச்சர்களை சட்டமன்றத்தில் பார்க்க முடிந்தது. இதை நான் சொன்னால் தவறாக முடியும்.

சட்டமன்ற நிகழ்வை பலர் ரசித்தனர், சிலர் ஆதரித்தனர், நிறைய பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குதிரை பேரத்தால் சட்டமன்ற தேர்தல் முடிந்த 3 மாதத்திலேயே இடைத்தேர்தல்.

நமது முதலமைச்சர் விஜய் லண்டன் சென்றுள்ளார். உடன் யார் யாரோ எல்லாம் சென்றுள்ளதாக கூறுகிறார்கள். உண்மையில் முதலீடுகளை ஈர்க்கத்தான் சென்றுள்ளரா? இந்த 3,4 நாட்களில் எத்தனைப் பேரை சந்திக்க முடியும்? இதெல்லாம் ஒரு கேள்விக்குறி.

சொந்த வேலைக்காக சென்றுள்ளார் என்றால், நாம் எதுவும் கேட்கமுடியாது. ஆனால் முதலீட்டாளர்களை ஈர்க்க சென்றுள்ளார் என்றால், யார் யாரை சந்தித்தார், எத்தனை கோடி முதலீடு வருகிறது? என்பதை எல்லாம் அவர் அறிவிக்க வேண்டும்.

இடதுசாரிகள் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கவேண்டும். இல்லையென்றால் அது சந்தர்ப்பவாத அரசியலாக கருதப்படும். ” என தெரிவித்தார்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel