தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

திருவள்ளூர் மாவட்டத்தில் 892 விநாயகர் சிலை அமைக்க அனுமதி

திருவள்ளூர் மாவட்டத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, வருவாய்த் துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை, மின்சாரத்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய துறைகளிடம் உரிய தடையில்லாச் சான்றும் அனுமதியும் பெற வேண்டும்.

சிலைகள் சுற்றுச் சூழலுக்கு உகந்த களி மண்ணால் மட்டுமே செய்யப்பட வேண்டும். ரசாயன வர்ணங்கள் அல்லது நச்சுத்தன்மை வாய்ந்த சாயங்களைப் பயன்படுத்தக் கூடாது.

இதர வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிலையங்கள் அருகில் சிலைகள் வைக்க அனுமதி இல்லை.

மேலும், சிலைகளின் பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் தலா 2 நபர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும்.

மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பதாகைகள் வைக்கவோ, கோஷங்கள் எழுப்பவோ கூடாது. மேலும், பட்டாசு வெடிக்கத் தடை உள்ளது.

இதுபோன்ற பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திருவள்ளூரில் 166 இடங்களிலும் ஊத்துக் கோட்டையில் 239 இடங்களிலும் திருத்தணியில் 294 இடங்களிலும் கும்மிடிப்பூண்டியில் 193 இடங்களிலும் என மொத்தம் 892 இடங்களில் சிலைகள் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக திருவள்ளூர் காவல் மாவட்டம் சார்பில் தெரிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel