யூடியூப் சேனல் மூலம் லட்சக்கணக்கில் வருமானம் - லாரி டிரைவரின் நெகிழ்ச்சி பயணம்
இந்த வீடியோக்கள் சிறப்பாக இருந்ததால் ஓட்டுநர் ராஜேஷின் மகனான சாகர் ரவானி, அவற்றை தொகுத்து யூடியூப்பில் பதிவேற்ற தொடங்கி, 2021-இல் ‘ஆர் ராஜேஷ் வ்லாக்ஸ்’ என்ற சேனலையும் தொடங்கினார்.
மேலும் அவர் இந்த புகைப்படங்களை முதலில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். அப்போது பயனர்கள் அவரிடம், தாங்கள் சமைக்கும் மட்டன், சிக்கன், மீன் மற்றும் பன்னீர் போன்ற உணவுகளின் தயாரிக்கும் முறைகளை வீடியோவாக எடுத்து பதிவிடுமாறு கூறினர்.
இதையடுத்து சாலையோரங்களில் தான் சமைப்பதை முழுநீள வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ பதிவிடப்பட்ட 24 மணி நேரத்திற்குள் சுமார் 4,50,000 பார்வைகளை பெற்றது.
மேலும் உணவு சமைக்கும் வீடியோக்கள் பயனர்களிடம் அதிகளவில் பார்வையாளர்களைப் பெற்று, யூடியூப்பில் ராஜேஷ் வ்லாக்ஸ் சேனலை வளர்ச்சிப் பாதையில் செலுத்தியது.
இதுகுறித்து ராஜேஷ் அளித்த நேர்காணல் ஒன்றில், தனது ஓட்டுநர் பணியில் மாதத்திற்கு சுமார் 25,000 முதல் 30,000 ரூபாய் வரை சம்பாதித்ததாக கூறினார்.
ஆனால் தற்போது யூடியூப் மூலம் அவரின் மாத வருமானம் சுமார் 4 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரையில் உயர்ந்து, சில சமயங்களில் ஒரே மாதத்தில் 18 லட்சம் ரூபாய் என்ற உச்சத்தையும் தொட்டது.
ராஜேஷ் வ்லாக்ஸ் சேனலானது பிரபல இந்திய தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திராவின் கவனத்தையும் பெற்றது. மேலும் ஓட்டுநர் ராஜேஷை, விடாமுயற்சி மற்றும் அன்றாட உத்வேகத்தின் உண்மையான சின்னம் என ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளத்தில் பாராட்டினார்.
ராஜேஷ் யூடியூப் மூலம் கிடைத்த வருமானம் மூலம், தற்போது தனது கனரக வாகனத்தை குளிரூட்டப்பட்ட அதிநவீன சொகுசு வாகனமாக மாற்றியுள்ளார்.
யூடியூப்பில் ‘ஆர் ராஜேஷ் வ்லாக்ஸ்’ சேனலை கிட்டத்தட்ட 30 லட்சம் பயனர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். மேலும் இன்ஸ்டாகிராமில் அவரது கணக்கை சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel