விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிப்பதா?- த.வெ.க. அரசை சாடிய உதயநிதி ஸ்டாலின்
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இந்த Dummy ஆட்சியாளர்களின் விளம்பர வெறியால், சம்பா பயிரைக் காப்பாற்ற முடியுமா என்ற அச்சத்தில் டெல்டா விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
குறுவை சாகுபடிக்கு திறக்க வேண்டிய நேரத்தில் மேட்டூர் அணையை திறக்காமல் முதலமைச்சர் விவசாயிகளை வஞ்சித்தார்.
இந்த சூழலில், “சம்பா சாகுபாடிக்கு அணையின் நீர்மட்டம் உயர்ந்த பிறகு செப்டம்பர் இறுதியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும்” என்று விவசாயிகள் சொன்னதை ஏற்காமல், வெற்று விளம்பரத்துக்காக செப்டம்பர் 1-ஆம் தேதியே திறந்து வைத்தார்.
தற்போது அணைக்கான நீர்வரத்து 4000 கனஅடி என குறைந்துவிட்ட நிலையில், அணையின் நீர் மட்டமும் 40 அடியை நோக்கி குறைந்து கொண்டு செல்கிறது.
இதனால் கடைமடை வரை தண்ணீர் சேருவதும்- பயிரின் பூப்பு நேரத்தில் தண்ணீர் வருவதும் சந்தேகம் என்பதால், சம்பா சாகுபடியை திட்டமிட்டப்படி செய்ய முடியாது என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குறுவை சிறப்பு தொகுப்புக்கும்– வறட்சி நிவாரணத்தும் வித்தியாசம் புரியாமல் பேசிய முதலமைச்சர், இன்றைக்கு பேப்பரை படித்திருந்தால் விவசாயிகளின் இந்த அவலநிலை புரிந்து இருக்கும்.
ஆற்றுப்பாசனத்தை நம்பி சம்பா சாகுபடியில் இறங்க வேண்டாம் என்று வேளாண் வல்லுநர்கள் கூறும் அளவிற்கு நிலைமையை மோசமாக்கி வைத்துள்ளது இந்த Circus அரசாங்கம்.
அடுத்த ஜென்மத்தில் விவசாயியாக பிறப்பேன் என்று வெற்று வசனங்களை பேசிய முதலமைச்சருக்கு, முழு பயிர்க்கடன் கேட்டுப் போராடும் விவசாயிகளை சந்திக்ககூட மனம் வரவில்லை.
திருச்சியில் போராடிய விவசாயிகளிடம் 5 நிமிடம் மட்டுமே அதிகார திமிரோடு பேசிவிட்டு சென்ற அமைச்சர்களை கண்டித்து அதற்கு ஒரு போராட்டம் நடத்தும் அளவில் தான் இந்த Reels வெறி ஆட்சி இருக்கிறது.
விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிக்காமல், வேளாண் பெருங்குடி மக்களுக்கு வறட்சி நிவாரணத்தையும், முழுப்பயிர்க்கடன் தள்ளுபடியையும் இந்த அரசு உடனே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel