தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

நாளை மறுநாள் முதல் காலாண்டு விடுமுறை..! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? வெளியானது முக்கிய அறிவிப்பு

2026-2027-ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டுத்தேர்வு விடுமுறை முடிந்து பள்ளித் திறக்கும் நாள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பள்ளிகள் திறப்பு இதுதொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் துவக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் காலாண்டுத்தேர்வு விடுமுறை 26.09.2026 முதல் 04.10.2026 வரை எனத் தெரிவிக்கப்பட்டு 05.10.2026 திங்கட்கிழமை அன்று அனைத்துவகைப் பள்ளிகளும் திறக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

காலாண்டுத்தேர்வு விடுமுறை முடிந்து பள்ளித் திறக்கும் நாள் அன்று 1 முதல் 7 வகுப்புகள் வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பாடநூல் வழங்கப்பட உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பள்ளிகள் திறக்கும் நாளன்று அனைத்து மாணவர்களுக்கும் விடைத்தாள்களை வழங்கி மதிப்பெண்களை உரிய பதிவேடுகளில் / EMIS-ல் பதிவு செய்ய தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், விஜயதசமி அன்று அரசு, அரசு உதவி பெறும் துவக்க / நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு மாணவர்களின் சேர்க்கை நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. தங்கள் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விவரங்களை EMIS கல்வித்தகவல் மேலாண்மை இணையதளத்தில் பள்ளியினால் உள்ளீடு செய்திடுமாறும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel