சிறப்புச் செய்தி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டி20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு

21 hours ago 29 பார்வைகள்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டி20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என வென்று கைப்பற்றியது.

இந்நிலையில், இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டி20 போட்டி உத்தர பிரதேசத்தின் லக்னோவில் இன்று நடைபெறுகிறது.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டியில் ஷ்ரேயஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.

ஒருநாள் தொடரில் அறிமுகமான நமன் தீர், டி20 போட்டியிலும் இன்று அறிமுக வீரராக களமிறங்குகிறார்.

இந்நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களமிறங்குகிறது.

அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஷ்ரேயஸ் அய்யர், திலக் வர்மா, ஷிவம் துபே, அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், நமன் தீர், மயங்க் யாதவ்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்