சிறப்புச் செய்தி

தமிழகத்தின் போஸ்ட் செட்டில்மென்ட் ஜிஎஸ்டி 16.1% உயர்வு..!- திமுக விமர்சனத்திற்கு தவெக பதிலடி

2 weeks ago 41 பார்வைகள்
தமிழகத்தின் போஸ்ட் செட்டில்மென்ட் ஜிஎஸ்டி 16.1% உயர்வு..!- திமுக விமர்சனத்திற்கு தவெக பதிலடி

தமிழகத்தின் போஸ்ட் செட்டில்மென்ட் ஜிஎஸ்டி 16.1% உயர்வு. திமுக கூறிய பொய் பிரசாரத்தின் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மொத்த ஜிஎஸ்டி தரவை மட்டும் வைத்து தமிழக அரசை விமர்சிப்பது தவறானது. பொய் பிரசாரத்தால் உண்மையை வெல்ல முடியாது என்று தமிழகத்தின் GST வருவாய் சரிவு என்ற திமுக விமர்சனம் குறித்து தவெக விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

"GST 5% சரிவு… தமிழக அரசின் நிர்வாகத் தோல்வி" என்று கடந்த சில நாட்களாக திமுகவினரின் அரைவேக்காட்டு பிரச்சாரத்தின் உண்மை முகம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Gross GST-ஐ மட்டும் காட்டி மக்களை ஏமாற்ற முயன்றவர்களை, அதிகாரப்பூர்வத் தரவு நறுக்கென்று குட்டியுள்ளது. தமிழ்நாட்டிற்கு உண்மையில் கிடைக்கும் Post-Settlement GST வருவாய் 16.1% உயர்ந்துள்ளது என தமிழ்நாடு நிதித்துறை செயலாளரே தெளிவுபடுத்தியுள்ளார்.

அப்படியிருக்க,"5% குறைந்துவிட்டது" என்று மட்டும் கூறி பொருளாதாரம் வீழ்ச்சி, அரசு நிர்வாகத் தோல்வி என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கூப்பாடு போடுபவர்களின் நோக்கம் அம்பலமாகியுள்ளது.

உற்பத்தி மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பொருட்களை விநியோகிக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், IGST Settlement உள்ளிட்ட பல்வேறு காரணிகள் Gross GST எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

எனவே, தமிழ்நாட்டின் உண்மையான GST வருவாய் நிலையை மதிப்பிடும்போது Post-Settlement GST தரவுக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

பொய் பிரச்சாரத்தால் உண்மையை வெல்ல முடியாது !

இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்