ஆசிய விளையாட்டு போட்டிகள், செஸ் போட்டிகளில் பங்கேற்று வெற்றிப்பெற்ற தமிழக வீரர்களுக்கு, சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.
ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் உஸ்பிஸ்தானில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை அளித்த தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் வீராங்கனைகளுக்கு, முதலமைச்சர் விஜய் விருந்தளிக்க உள்ள நிலையில் தனியார் விடுதிக்கு பதக்கம் வென்ற வீரர்கள் வருகை தந்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஆசிய விளையாட்டு வரலாற்றை தாங்கி நிற்கும் நினைவுப் பரிசை முதலமைச்சர் விஜய்க்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்.
மேலும், சென்னையில் நடந்த விழாவில் ட்ரீம்ஸ் ஒலிம்பிக்ஸ் 2036 என்ற திட்டத்தை முதலமைச்சர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.
8 வயது முதலே வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு தொடர்ந்த பயிற்சி அளிக்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036 என்ற திட்டத்தின் இலக்கு குறித்த வீடியோ விழாவில் வெளியிடப்பட்டது.
அதில், ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் ட்ரீம் ஒலிம்பிக் திட்டத்தில் சேர்க்கப்படுவர்.
பதக்கம் வென்றவர்கள் ட்ரீம் ஒலிம்பிக் திட்டத்தில் சேர்க்கப்பட்டு மாதந்தோறும் ரூ.1 லட்சம் வரை உதவித்தொகை தரப்பட உள்ளது.