இடைத்தேர்தல் வெற்றியுடன் தமிழக முதலமைச்சர் விஜய், ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை விஜயவாடாவில் வருகிற 13-ந் தேதி (செய்வாய்க்கிழமை) சந்திக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பின்போது தென் மாநில நதிகள் இணைப்பு திட்டம், குறிப்பாக கோதாவரி, கிருஷ்ணா, காவிரி இணைப்பு மற்றும் சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட உள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம், முதலமைச்சர் விஜய் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், மாநிலங்களுக்கு இடையிலான ஆலோசனைகளை விரைவு படுத்த தலையிடுமாறு கேட்டுக்கொண்டார். கர்நாடகாவுடன் காவிரி நீர் பங்கீட்டுக்காக தமிழகம் நடத்தி வரும் நீண்டகால சட்டப் போராட்டத்தின் பின்னணியில் இந்த சந்திப்பு நடப்பது குறிப்பிடத்தக்கது. பிலிகுண்டுலு எல்லையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கடந்த 7-ந் தேதி வரை வழங்கி இருக்க வேண்டிய 128 டிஎம்சி.,தண்ணீருக்கு பதிலாக 46 டிஎம்சி., மட்டுமே கிடைத்துள்ளது.
சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பது குறித்தும் இந்த சந்திப்பில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் படி, ஆந்திர அரசு தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 12 டிஎம்சி.,கிருஷ்ணா தண்ணீரை எல்லைப் பகுதியில் வழங்க வேண்டும். ஆனால் தமிழகத்திற்கு நேற்று வரை 2.25 டிஎம்சி., மட்டுமே கிடைத்துள்ளது.
இதற்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது 2017 பிப்ரவரி மாதத்தில் இந்த கிருஷ்ணா நீர் பிரச்சனை குறித்து சந்தித்து பேசிய நிலையில், தற்போது முதலமைச்சர் விஜய் ஆந்திர முதல்-மந்திரியை சந்திக்க உள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.