சிறப்புச் செய்தி

சென்னை வந்தடைந்தார் ராகுல் காந்தி - காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு

9 hours ago 15 பார்வைகள்
சென்னை வந்தடைந்தார் ராகுல் காந்தி - காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு

இந்திய கல்வி முறையில் நடைபெறும் முறைகேடுகள், நீட் உள்ளிட்ட தேர்வுத் தாள் கசிவுகள், கல்விக் கட்டண உயர்வு மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களை திரட்டி நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி 'மாணவர்களின் குரல்' என்ற நிகழ்ச்சி வாயிலாக அவர்களிடம் பேசி வருகிறார்.

அதன்படி, ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் தொடங்கி, மகாராஷ்டிர மாநிலம் புனே மற்றும் நாசிக் நகரங்கள், மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூர் போன்ற இடங்களில் 'மாணவர்கள் குரல்' நிகழ்ச்சி நடத்திய ராகுல்காந்தி, இன்று சென்னையில் உள்ள தீவுத்திடலில் மாணவர்கள் முன்னிலையில் பேச இருக்கிறார்.

இந்நிலையில், மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ராகுல் காந்தி இன்று சென்னை வந்தார்.

சென்னை வந்த ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசு, ஜோதிமணி உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் விஜயை ராகுல் காந்தி சந்திக்க உள்ளார்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்