சிறப்புச் செய்தி

உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை மோடி தான் நேரடியாக நியமித்து வருகிறார் - முன்னாள் நீதிபதி சந்துரு

12 hours ago 17 பார்வைகள்
உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை மோடி தான் நேரடியாக நியமித்து வருகிறார் - முன்னாள் நீதிபதி சந்துரு

உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் குழு தேர்வு செய்து நியமித்து வருகிறது.

இந்நிலையில் கொலீஜியத்திற்கு பதிலாக பிரதமர் மோடியே உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமத்தில் ஆதிக்கம் செலுத்தி வருவதாக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் நேற்று ஏசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம் கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்துகொண்ட சந்துரு ‘Who Will Judge the Judges’ என்ற தலைப்பில் ஆற்றிய உரையில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

கொலீஜியம் முறைக்கு பதிலாக மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, நீதித்துறை நியமனங்களில் ஆதிக்கம் செலுத்த 2014 இல் நேஷனல் ஜூடிசியல் அபாண்ட்மன்ட்ஸ் கமிஷன் (NJAC)ஐ உருவாக்க முயன்றது. ஆனால் 2015, அதை அரசியலமைப்புக்கு எதிரானது என கூறி உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

NJAC ஐ கொண்டுவர அதன் பின் பாஜக அரசு முயலவில்லை. மாறாக நீதித்துறை நியமனங்களில் ஆதிக்கம் செலுத்த பல மேம்பட்ட வழிகளை அது கண்டறிந்தது.

அதுமுதல் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் மோடியால் நேரடியாக நியமிக்கப்பட்டு வருகின்றனர், கொலீஜியதால் அல்ல என தெரிவித்தார்.

மேலும் தற்போதுள்ள கொலீஜியம் முறையையே விமர்சித்த அவர், அது அரசியலமைப்பின் அடித்தளத்தில் தான் செயல்படுகிறது என்பதையே இருட்டடிப்பு செய்யும் வகையில் அதன் செயல்முறை வெளிப்படைத்தன்மை அற்று இருப்பதாக தெரிவித்தார்.

"தற்போது உச்சநீதிமன்றத்தில் 38 நீதிபதிகளும், உயர் நீதிமன்றங்களில் சுமார் 1000 நீதிபதிகளும் இருக்கின்றனர். ஆனால் அவர்களின் நியமன செயல்முறை வெளிப்படைத்தன்மை அற்று கொலீஜியத்தால் ரகசியமாக மேற்கொள்ளப்படுகிறது. நாட்டின் மிகப்பெரிய ரகசியம் அதுவே" என தெரிவித்தார்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்