சிறப்புச் செய்தி

நதிநீர் விவகாரம்: நாளை சந்திரபாபு நாயுடுவை சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்

1 day ago 18 பார்வைகள்
நதிநீர் விவகாரம்: நாளை சந்திரபாபு நாயுடுவை சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்

தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் ஆண்டுதோறும் 12 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும். இந்த ஆண்டு கடந்த 9-ந் தேதி வரை தமிழகத்திற்கு 2.251 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே கிடைத்தது.

தமிழகத்துக்குள் வரும் ஆறுகளில் அணை கட்டவும் ஆந்திர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விவகாரங்கள் குறித்து பேச்சு நடத்தவும், நதிநீர் இணைப்பு குறித்து ஆலோசனை நடத்தவும் தமிழக முதலமைச்சர் விஜய், நாளை (13-ந் தேதி) விஜயவாடா செல்கிறார்.

அங்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளன.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்