சிறப்புச் செய்தி

ஞானேஷ்குமாரை பாதுகாக்க குடிமக்கள் மீது மோடி அரசு போர் தொடுக்கிறது - அபிஜீத் தீப்கே குற்றச்சாட்டு

13 hours ago 17 பார்வைகள்
ஞானேஷ்குமாரை பாதுகாக்க குடிமக்கள் மீது மோடி அரசு போர் தொடுக்கிறது - அபிஜீத் தீப்கே குற்றச்சாட்டு

தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சி.ஜே.பி.) டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டது.

தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை போலீசார் கைது செய்து விடுவித்தனர். சி.ஜே.பி. தலைவர் அபிஜீத் தீப்கே உள்பட அந்த அமைப்பின் 3 தலைவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.

பின்னர் அவர்கள் நிபந்தனையில் விடுவிக்கப்பட்டனர். ஓராண்டு வரை அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடாது என்று மாஜிஸ்திரேட் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பாதுகாக்க மோடி அரசு குடிமக்கள் மீது போர்த் தொடுப்பதாக அபிஜித் தீப்கே குற்றம் சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று தனது எக்ஸ் வலைத் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

இளைஞர்கள், பத்திரிகையாளர்கள் டெல்லி போலீசாரால் தாக்கப்படுகிறார்கள். பாராளுமன்ற எம்.பி.க்கள் கூட தாக்கப்படுகிறார்கள்.

ஞானேஷ்குமாரை காப்பாற்றுவதற்காக மட்டும் அனைவருடனும் மோதத் துணியும் அளவுக்கு அவர் மோடிக்கு அப்படி என்ன தவிர்க்க முடியாத நபராகி விட்டார்?

இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

அபிஜித் தீப்கே மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான சந்துக் பிம்பரிக்கு நள்ளிரவில் சென்றார். அங்கு தனது பாட்டியின் இறுதிச்சடங்கு நடைபெற்ற இடத்தை பார்வையிட்டார்.

இதைத் தொடர்ந்து அவர் தனது எக்ஸ் வலைத் தளப்பதிவில் மோடி அரசை கடுமையாக சாடியுள்ளார்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்