சிறப்புச் செய்தி

உச்சநீதிமன்றத்தை நோக்கி இந்தியா கூட்டணி பேரணி- ராகுல் காந்தி, மம்தா பங்கேற்பு

11 hours ago 16 பார்வைகள்
உச்சநீதிமன்றத்தை நோக்கி இந்தியா கூட்டணி பேரணி- ராகுல் காந்தி, மம்தா பங்கேற்பு

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இரண்டு பேரணிகளை நடத்திய நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (9ஆம் தேதி) ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து மனு அளித்தனர்.

இதேபோல், தொடர்ந்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மற்றும் மாணவர்கள் அமைப்பினர் தொடர்ந்து டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தை நோக்கி பேரணியாக சென்று தலைமை நீதிபதியை சந்தித்து மனு அளிக்க இருப்பதாக காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அந்த மனுவில், வாக்குத் திருட்டைத் தடுக்கவும், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (எஸ்.ஐ.ஆர்.) நிறுத்தவும், ஞானேஷ் குமார் பதவி விலகவும் வலியுறுத்த உள்ளனர்.

SIR மூலம் வாக்குகளை திருடியதாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, ஞானேஷ் குமாரை நீக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றம் நோக்கி ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி கட்சியினர் பேரணியை தொடங்கினர்.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக கோரி டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணியாக சென்றுள்ளனர். இதில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பானர்ஜி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தியா கூட்டணி கட்சியினரின் பேரணியில் திரளாக பலர் பங்கேற்றுள்ளனர்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்