சிறப்புச் செய்தி

கிரீஸ் நாட்டு அமெரிக்க தூதர் கிம்பர்லி கில்ஃபாயில் அதிரடி பணிநீக்கம்!

17 hours ago 14 பார்வைகள்
கிரீஸ் நாட்டு அமெரிக்க தூதர் கிம்பர்லி கில்ஃபாயில் அதிரடி பணிநீக்கம்!

டிரம்பின் புதிய பத்திரிகையாளர் சந்திப்புச் செயலாளர் கேட்டி சக்காரியா, தனது முதல் வெள்ளை மாளிகை ஊடகச் சந்திப்பில், "தூதர் கில்ஃபாயிலை நாங்கள் ராஜினாமா செய்யக் கேட்டுக்கொண்டோம்" என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அதிபர் டிரம்பின் மூத்த மகனின் முன்னாள் காதலி ஆவார். இந்த நீக்கம் குறித்துப் பேசிய அதிபர் டொனால்ட் டிரம்ப், "அவர் தனது பணியைச் சிறப்பாகத்தான் செய்து வந்தார், ஆனால் அவரைப் பற்றி ஊடகங்களில் வந்த செய்திகள் எங்களுக்குப் பிடிக்கவில்லை" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கிம்பர்லி கில்ஃபாயிலுக்கு எதிராகத் தொடர்ந்து பல அதிர்ச்சியூட்டும் செய்திகளைச் சர்வதேச ஊடகமான தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டு வந்தது. அவற்றில் முதன்மையான புகார்கள் வந்துள்ளன.

கடந்த ஜூலை 2025-ல் நடைபெற்ற செனட் சபையின் தூதர் அங்கீகாரக் கூட்டத்திற்குச் சற்று முன்பாக, டிரம்பின் தீவிர ஆதரவாளரான எரிக் டீட்டர்ஸ் என்பவரிடம் தனது ரூ.94 லட்சம் தனிப்பட்ட கிரெடிட் கார்டு கடனை அடைக்குமாறு கிம்பர்லி கோரியுள்ளார்.

மேலும், எந்தவொரு ஆதாரமும் சிக்காமல் இருக்க இந்தத் தொகையை 'வயர் டிரான்ஸ்ஃபர்' மூலம் அனுப்புமாறு அவர் அனுப்பிய குறுஞ்செய்திகளின் ஸ்கிரீன்ஷாட்டுகளையும் வெளியானது. எனினும், எரிக் டீட்டர்ஸ் இப்பணத்தைத் தர மறுத்துவிட்டார்.

கிரீஸ் நாட்டின் கட்டுமான நிறுவனமான 'ஆக்டர் குரூப்' தலைமை நிர்வாகி அலெக்சாண்ட்ரோஸ் எக்சார்ச்சு என்பவருடன் சேர்ந்து, சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகருக்குக் கிம்பர்லி தனியார் ஜெட் விமானத்தில் பயணித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, கிரீஸ் நாட்டு கப்பல் அதிபரான நிகோலாஸ் சாகோஸ் என்பவரின் செலவில் பாரிஸின் சொகுசு ஹோட்டல் தங்குமிடம் மற்றும் சுவிஸ் பனிச்சறுக்கு ரிசார்ட்டான கஸ்டாட் ஆகிய இடங்களுக்குச் சொகுசுப் பயணம் மேற்கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ள கிம்பர்லி கில்ஃபாயில், தனது 'X' பக்கத்தில், "இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை; எனது பெயர், நற்பெயர் மற்றும் நேர்மையைக் காக்க நான் தீவிரமாகப் போராடுவேன்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், தூதராகத் தனது பதவிக்காலம் முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொண்டு, அதிபர் டிரம்ப் மற்றும் வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோருக்குத் தனது நன்றியையும், டிரம்ப் மீதான தனது விசுவாசத்தையும் தெரிவித்துள்ளார்.

தற்போது, அமெரிக்க வெளியுறவுத்துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல், கிம்பர்லி கில்ஃபாயில் விதிகளுக்குப் புறம்பாக இத்தகைய பரிசுப் பொருட்களைப் பெற்றாரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவின் முக்கிய 'MAGA' இயக்கத்தின் முக்கிய முகமாக இருந்த கில்ஃபாயிலின் இந்த வீழ்ச்சி சர்வதேச அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்