சிறப்புச் செய்தி

வரத்து குறைந்ததால் அரிசி விலை உயர்வு- அமைச்சர் வெங்கட்ரமணன்

1 month ago 102 பார்வைகள்
வரத்து குறைந்ததால் அரிசி விலை உயர்வு- அமைச்சர் வெங்கட்ரமணன்

விலைவாசி தொடர்பாக விவாதிக்க ரேசன் கடைக்கு செல்வோம் என பேசிய பரந்தாமனுக்கு அமைச்சர் வெங்கட்ரமணன் பதில் அளித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து அரிசி வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது.

அரிசி, சர்க்கரை, பருப்பு விலை குறைப்பு தொடர்பாக ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும்.

விலைவாசி குறித்து அரைகுறையாக தெரிந்துகொண்டு திமுக நிர்வாகி பரந்தாமன் சவால் விடுகிறார்.

பரந்தாமன் செல்லாமல் இருந்திருக்கலாம், நாங்கள் ரேசன் கடை பொருள் வாங்கி உணவு உண்டு வாழ்ந்தவர்கள் தான்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்