சிறப்புச் செய்தி

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது 100% வரி விதிக்கும் மசோதா: ‘10 நாட்களில் டிரம்ப் முடிவெடுப்பார்’ - அமெரிக்கத் தூதர்!

4 hours ago 12 பார்வைகள்
இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது 100% வரி விதிக்கும் மசோதா: ‘10 நாட்களில் டிரம்ப் முடிவெடுப்பார்’ - அமெரிக்கத் தூதர்!

ரஷியாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிபொருள் வாங்கும் நாடுகள்மீது 100% வரிவிதிக்கும் மசோதா குறித்து 10 நாட்களில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவெடுப்பார் என இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.

இது யாரையும் தண்டிக்கும் நோக்கம் கொண்டதல்ல என்றும், உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியே எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

ப்ளூம்பெர்க் புதிய பொருளாதார மைய மாநாட்டில் பேசிய கோர்.,

“அமெரிக்க செனட் சபையில் இந்தச் சட்ட மசோதாவுக்கு வலுவான ஆதரவு கிடைத்துள்ளதால், இதுகுறித்து தொடர்ந்து விவாதித்து வருகிறோம். எங்கள் செனட் சபையில் 100 வாக்குகளில் 86 வாக்குகள் இந்த மசோதாவிற்கு கிடைத்தன.

காங்கிரஸ் நிறைவேற்றிய இந்தத் தடைகள், எந்தவொரு குறிப்பிட்ட நாட்டையும் இலக்காகக் கொண்டவை அல்ல. இவை மூன்று வெவ்வேறு பிரிவுகளைக் கொண்டவை: ஒன்று எண்ணெய், இரண்டாவது எரிவாயு, மூன்றாவது தடைகளைத் தவிர்ப்பது.

இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் அல்லது அமைப்புகள் சில அளவுகோல்களின் அடிப்படையில் அடையாளம் காணப்படுகின்றன. தற்செயலாக, பல நாடுகளைப் போலவே இந்தியாவும் இந்த வகைகளில் ஒன்றின் கீழ் வருகிறது.

யாரையும் தண்டிப்பது இதன் நோக்கமல்ல; மாறாக, இந்த போருக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதே இதன் நோக்கம். வரும் நாட்களில் அதிபர் இது குறித்து ஒரு முடிவை எடுப்பார் என்று நான் கருதுகிறேன்.” என தெரிவித்தார்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்