தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கமிஷனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆயுதப்பூஜை (19-ந்தேதி), சரஸ்வதி பூஜை (20-ந்தேதி) தொடர் விடுமுறையின் காரணமாக பொது விநியோக திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்கள் குடும்ப அட்டைதாரர்கள் பாதிப்படையக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும்.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 21-ந்தேதி (சனிக்கிழமை) விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.