உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலை தடுக்கும் விதமாக, மறைந்த செனட்டர் லிண்ட்சே கிரகாம் பெயரில் கடந்த மாதம் லிண்ட்சே ஓ.கிரகாம் சட்டத்தை டிரம்ப் அறிவித்தார்.
இந்த சட்டத்தின் கீழ் ரஷிய எரிசக்தி ஏற்றுமதி தொடர்பான பொருட்களின் மீது 100 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.
ரஷியா மீதான இந்த தடை நடவடிக்கைகளை அமல்படுத்தவோ அல்லது அதற்கு விலக்கு அளிக்கவோ அக்டோபர் 18-ஆம் தேதி காலக்கெடுவாக அறிவிக்கப்பட்டது.
மேலும், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் முதல் ஐந்து நாடுகளிடம் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விதிப்பு அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து சமீபத்தில் அமெரிக்காவிற்கு வருகை தந்த ரஷிய அதிபர் புதின், டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு ரஷியா மீதான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு மீதான தடைகள் ரத்து செய்யப்படும் என டிரம்ப் தெரிவித்தார்.
மேலும் அவர், அமெரிக்க மற்றும் உலக சந்தைகளுக்கு ரஷியா உடனடியாக 3,00,000 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமாக, 2.25 மில்லியன் பீப்பாய்களை விநியோகிக்கும் என டிரம்ப் கடந்த வாரம் அறிவித்தார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதனை கருத்தில் கொண்டு, வரலாறு காணாத வகையில் உச்சத்தில் இருக்கும் டீசல் விலையை குறைப்பதற்கு டிரம்ப் முயன்று வருகிறார்.
மேலும், டிரம்ப் நிர்வாகத்தின் மீது அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய விமர்சனங்களை தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரஷியா தான் உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெயை உலகளவில் விற்பனை செய்ய அனுமதிப்பது, ரஷியாவிற்கு கிடைக்கும் வருவாய் மூலம் உக்ரைன் போரில் பயன்படுத்தவும், சீனா, ஈரான் மற்றும் வட கொரியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டு வருவதாக செனட்டர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையை வெள்ளை மாளிகை பகிர்ந்துள்ளது.
அந்த அறிக்கையில், “இந்த நேரத்தில் அத்தகைய விலக்கு அளிப்பது அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கு உகந்தது என்பதற்கான சான்றிதழை காங்கிரஸிடம் சமர்ப்பித்துள்ளேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.