சிறப்புச் செய்தி

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி

16 hours ago 15 பார்வைகள்
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி

பாகிஸ்தான் தலைநகர் கராச்சியில் 1927-ல் பிறந்த எல்.கே.அத்வானி, 1947-ல் நடந்த தேச பிரிவினையை தொடர்ந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்தார்.

இவர் பாரதிய ஜனதா கட்சியின் எழுச்சி பங்கில் ஒரு முக்கிய நபராக திகழ்ந்து, அதன் தலைவராக மூன்று முறை பணியாற்றினார்.

அடல் பிஹாரி வாஜ்பாய் அரசின் காலகட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சராக அத்வானி பணியாற்றினார். இதையடுத்து 2002 முதல் 2004 வரையிலான காலத்தில் துணை பிரதமராக பணியாற்றினார்.

இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத ரத்னா, 2024 மார்ச் மாதம் அத்வானிக்கு வழங்கப்பட்டது.

அத்வானியின் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மூத்த தலைவர்கள் முன்னிலையில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பாரத ரத்னா விருதை வழங்கினார்.

பிரதமர் மோடி அரசியல் களத்திற்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதனை கொண்டாடும் விதமாக அக்டோபர் 7-ஆம் தேதி அத்வானியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து மோடி ஆசி பெற்றார்.

இதையடுத்து 98 வயதாகும் அத்வானி, வயது மூப்பின் காரணமாக அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு 7:30 மணியளவில் நுரையீரல் தொற்று பிரிவில் அனுமதிக்கப்பட்டு அத்வானி சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது அத்வானியின் உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்