முதலமைச்சரின் பெரம்பூர் தொகுதி நிதியில் இருந்து 13 நவீன இயந்திரங்களை கொள்முதல் செய்ய முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் பாதாள சாக்கடை சுத்தம் செய்ய 13 நவீன இயந்திரங்களை கொள்முதல் செய்ய தமிழக அரசு டெண்டர் கோரியது.
பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்காமல் இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்யும் திட்டத்தை விரிவுபடுத்த சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் (CMWSSB) மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய போட்டி டெண்டர் (National Competitive Bidding) முறையில் 2 கவர் சிஸ்டத்தில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
3 மற்றும் 4 சக்கர DESILTING இயந்திரங்கள், JET RODDING இயந்திரங்கள், SUPER SUCKER இயந்திரங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.