இந்த நிகழ்வில் கரப்பான் பூச்சி உருவ பொம்மையை டெல்லி பாஜக அமைச்சர் கபில் மிஷ்ரா தீயிட்டு கொளுத்தினார்.
இதுகுறித்து பாஜக உறுப்பினர் அசோக் கோயல் தேவராஹா கூறுகையில், இந்த ஆண்டு கரப்பான் பூச்சி உருவ பொம்மை எரிக்கப்பட்டதன் நோக்கம், அசுத்தம் மற்றும் அதனால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே ஆகும் என தெரிவித்தார்.
மேலும் அவர், கரப்பான் பூச்சிகள் சமூகத்தில் சுகாதாரமற்ற சூழல்களை உருவாக்குவதாகவும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் கரப்பான் பூச்சி உருவ பொம்மையை எரித்து, எங்களுக்கு ‘இலவசமாக விளம்பரம் செய்து வைத்ததற்கு நன்றி’ என அபிஜீத் தீப்கே பதிவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட சிஜேபி நிர்வாகிகளை விடுதலை செய்யுமாறு கோரிக்கை வைத்த ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக், டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜீ ஆகியோர்களுக்கும் தீப்கே தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “சௌரவ் மற்றும் அஷுதோஷ் ரங்காவுக்கு எவ்வளவு கடினமாக இருக்கிறதோ, அதே அளவுதான் உங்கள் அனைவருக்கும் நிலைமை கடினமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
தெருக்களில் எத்தனை தொண்டர்கள் தாக்கப்பட்டும், தடுத்து வைக்கப்பட்டும் இருக்கிறார்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன்.
ஆனால், எங்களை விட எங்கள் குடும்பங்களுக்குத்தான் நிலைமை மிகவும் கடினமாக இருக்கிறது.
எனவே இப்போது எனது அனைத்து கரப்பான் பூச்சி நண்பர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்; சில நாட்களுக்கு உங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுங்கள். பண்டிகைகள் நெருங்கி வருகின்றன," என்று தீப்கே தெரிவித்துள்ளார்.