சிறப்புச் செய்தி

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு ‘கேக்’ வழங்க 4 நிறுவனங்களுக்கு ஆணை

58 minutes ago 8 பார்வைகள்
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு ‘கேக்’ வழங்க  4 நிறுவனங்களுக்கு ஆணை

மறைந்த முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் நவம்பர் 14-ந் தேதியாகும். ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் குழந்தைகளுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதுடன், குழந்தைகளின் பிரியமான நேருவுக்கு அரசியல் கடந்து பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்துகின்றனர்.

மேலும், குழந்தைகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளில் கலை, இலக்கிய போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில், குழந்தைகள் தினத்தையொட்டி அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ‘கேக்’ வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக தமிழக அரசு டெண்டரும் வெளியிட்டிருந்தது. இதில் பிரிட்டானியா, எலைட் நேச்சுரல்ஸ், ஐ.டி.சி, கிரீம் கேக் ஆகிய 4 நிறுவனங்களுக்கு டெண்டர் கிடைத்துள்ளது.

இதை தொடர்ந்து ரூ.9.27 கோடி செலவில் ஸ்பாஞ்ச் கேக் துண்டுகள் வழங்கப்பட உள்ளன. ஒவ்வொரு கேக் துண்டும் 45 கிராம் எடை கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் கேக்குகள் பெறப்படும்போது மொத்த காலாவதி காலத்தில் குறைந்தது 30 நாட்கள் மீதமிருக்க வேண்டும் எனவும் அந்த நிறுவனங்களுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்