சிறப்புச் செய்தி

கச்சா எண்ணெய் விலை உயர்வு

59 minutes ago 17 பார்வைகள்
கச்சா எண்ணெய் விலை உயர்வு

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.

இதற்கிடையே சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதில் எண்ணெய் நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன.

இந்தநிலையில் சவுதி அரேபியா மீதான ஹவுதியின் தாக்குதல்கள் மற்றும் லிபியாவில் உள்ள எண்ணெய் குழாய் ஒன்றில் ஏற்பட்ட தடங்கல் ஆகியவற்றை தொடர்ந்து பிரென்ட் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து உள்ளது.

இன்று காலை நிலவரப்படி டிசம்பர் மாத விநியோகத்திற்கான பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 113.82 (இந்திய மதிப்பில் ரூ.10,800) அமெரிக்க டாலருக்கு வர்த்தகமாகின.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்