சிறப்புச் செய்தி

நாளை 2-வது டி20 போட்டி: நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் அதிரடி நீடிக்குமா?

32 minutes ago 10 பார்வைகள்
நாளை 2-வது டி20 போட்டி: நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் அதிரடி நீடிக்குமா?

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நாளை (24ம் தேதி) நடக்கிறது.

ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணியின் அதிரடி இந்த ஆட்டத்திலும் நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 2-0 என்ற முன்னிலையை பெறும் ஆர்வத்தில் உள்ளது. முதல் போட்டியில் 226 ரன் இலக்கை எடுத்து இந்திய அணி சாதித்தது.

அபாரமான பேட்டிங் தான் இதற்கு காரணம். அதே நேரத்தில் பந்துவீச்சு தொடர்ந்து கவலை அளிக்கும் வகையில் இருக்கிறது.

தொடக்க வீரர்களான சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், நமன் திர், அக்ஷர் படேல் ஆகியோர் நேற்று சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள்.

பேட்டிங் வரிசையில் செய்யப்பட்ட மாற்றம் இஷான் கிஷன், திலக் வர்மா ஆகியோரை பாதித்தது. அணி வெற்றி பெற்றுவிட்டதால் அதில் பிரச்சினை இல்லை.

4 ஆண்டுகளுக்கு பிறகு அணிக்கு திரும்பிய புவனேஷ்வர் குமார் பந்து வீச்சில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து அணி முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வேட்கையில் இருக்கிறது. அந்த அணியின் பேட்டிங்கில் பின் ஆலன், கிளன் பிலிப்ஸ், பெவன் ஜேக்கப் ஆகியோர் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர்.

இரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் 32 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 17-ல், நியூசிலாந்து 12 -ல் வெற்றி பெற்றுள்ளன. 3 ஆட்டம் டை ஆனது.

நாளைய போட்டி இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்