சிறப்புச் செய்தி

ஆவின் பொருட்கள் விலை உயர்வு - நாளை முதல் அமல்

4 hours ago 21 பார்வைகள்
ஆவின் பொருட்கள் விலை உயர்வு - நாளை முதல் அமல்

தீபாவளி நெருங்கும் நிலையில் ஆவின் நெய், வெண்ணெய், இனிப்பு பொருட்களின் விலை அதிரடியாக உயர்கிறது. தமிழ்நாட்டில் நாளை முதல் 63 ஆவின் பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டு அமலுக்கு வருகிறது.

நெய் 1 லிட்டர் நெய் விலை ரூ.80 அதிகரிக்கப்பட்டு ரூ.780 ஆக உயர்ந்துள்ளது. 500 மி.லி நெய் விலை ரூ.30 உயர்ந்து ரூ.400 ஆக உயர்ந்துள்ளது. 100 கிராம் நெய் பாட்டில் ரூ.10 உயர்ந்து ரூ.95 ஆக அதிகரித்துள்ளது.

மில்க் ஷேக் (200 மி.லி) ரூ.30-லிருந்து ரூ.35 ஆக உயர்வு

தயிர் (500 மி.லி) ரூ.35-லிருந்து ரூ.40 ஆக உயர்வு

ரசகுல்லா, பால்கோவா, மைசூர்பாக், அல்வா, காஜு கத்லி உள்ளிட்ட இனிப்பு பொருட்களின் விலை உயர்கிறது.

250 கிராம் மைசூர்பாக் ரூ.160,

250 கிராம் காஜு கத்லி ரூ.280

250 கிராம் பாதுஷா ரூ.205 ஆக உயர்த்தப்படுகிறது.

ஆவின் பால் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மூலப்பொருட்கள் மற்றும் நிர்வாகச் செலவுகள் அதிகரிப்பால் இந்த விலை உயர்வு செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், மக்கள் அதிகம் வாங்கும் ஆவின் பொருட்களான நெய், வெண்ணெய், இனிப்பு வகை பொருட்கள் விலை உயர்த்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்