சிறப்புச் செய்தி

அன்பில் மகேஷுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் - சென்னை ஐகோர்ட்

1 hour ago 17 பார்வைகள்
அன்பில் மகேஷுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் - சென்னை ஐகோர்ட்

தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரூ.400 கோடி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்படுத்தப்பட்டார்.

அன்பில் மகேஷை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு நீதிபதி சத்தியமூர்த்தி முன் விசாரணை நடைபெற்றது.

வாதத்தின்போது விசாரணை அதிகாரி தரப்பில், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க பெறப்பட்ட லஞ்சப்பணம் எங்கு சென்றது என அன்பில் மகேஷிடம் விசாரிக்க வேண்டும்.

* அன்பில் மகேஷிடம் விசாரணை நடத்தும்போது நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகள் பின்பற்றப்படும்.

* அன்பில் மகேஷ் உரிய மன நலன், உடல் நலத்துடனும் மீண்டும் நீதிமன்றத்தில ஆஜர்படுத்தப்படுவார்.

* அன்பில் மகேஷ், குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரங்கள், பினாமி குறித்து விசாரிக்க வேண்டும்.

* உறவினர்கள் சொத்து தொடர்பாக விசாரணை நடத்த வேண்டி உள்ளதால் 5 நாள் கஸ்டடி தேவை என்று அதிகாரி கூறினார்.

இதையடுத்து அன்பில் மகேசுக்கு போலீஸ் காவல் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அன்பில் மகேஷை நவ.2 வரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்