சிறப்புச் செய்தி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல்: 4வது இடத்துக்கு முன்னேறியது இந்தியா

1 hour ago 18 பார்வைகள்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல்: 4வது இடத்துக்கு முன்னேறியது இந்தியா

வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டாக்காவில் நடைபெற்றது. முதலில் ஆடிய வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் 272 ரன்னில் ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 245 ரன்னில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் வங்கதேசம் 27 ரன்கள் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து 2வது இன்னிங்ஸ் ஆடிய வங்கதேசம் 142 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 2 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் போட்டியில் வங்கதேசம் தோல்வி அடைந்ததால், புள்ளிப் பட்டியலில் ஒரு இடம் பின்தங்கியது. இதையடுத்து, இந்திய அணி 4வது இடத்துக்கு முன்னேறியது.

இந்த தோல்வியின் மூலம் வங்கதேச அணி 47.62 சதவீதமாகக் குறைந்தது. இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 3 வெற்றி, 3 தோல்வியுடன் வங்கதேச அணி பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. சொந்த மண்ணில் வங்கதேசம் அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

ஆஸ்திரேலிய அணி 75.00 சதவீத புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

நியூசிலாந்து அணி 72.22 சதவீத புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

தென் ஆப்பிரிக்க அணி 66.67 சதவீத புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது.

இந்திய அணி 11 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 51.52 சதவீத புள்ளிகளைப் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்