சம்பளம் வாங்கிய முதல் வாரத்தில் செலவுகள் அதிகமாகவும், மாத இறுதியில் கைவசம் குறைவாகவும் இருப்பது பலரின் வாழ்க்கையில் நடைபெறும் பொதுவான நிகழ்வாக மாறிவருகிறது.
உயர்ந்து வரும் விலைவாசி, ஆன்லைன் ஷாப்பிங் மோகம், கடன் அட்டை செலவுகள் என பல்வேறு காரணிகளால் மாதாந்திர சேமிப்பு என்பது கனவாக மாறிவிடுகிறது.
எனினும், சம்பளத்தில் சேமிக்க முடியாது என்பது அல்ல, சேமிக்க தெரியாது என்பதுதான் பெரும்பாலானவர்களின் பிரச்சனை என நிபுணர்கள் கூறுகின்றனர்.
சம்பளம் வந்தவுடன் சேமிப்பை முதலில் பிரித்து எடுப்பது, 50-30-20 நிதி விதி, சிறிய செலவுகளை கட்டுப்படுத்துவது போன்ற எளிய முறைகளை பின்பற்றினால், குறைந்த சம்பளத்திலும் கூட குறிப்பிடத்தக்க சேமிப்பை உருவாக்க முடியும்.
சேமிப்பு என்பது பணக்காரர்களுக்கு மட்டுமானது அல்ல, ஒவ்வொருவருக்கும் நிதி பாதுகாப்பை தரும் அடிப்படை உரிமையாகும்.
இருப்பினும், வாங்கும் சம்பளத்தில் சேமிக்க முடிகிறதா? என்று மாலைமலர் சார்பில் பொது மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டது.
வாங்கும் சம்பளத்தில் சேமிப்பு என்பது இன்றைய காலக்கட்டத்தில் சாத்தியமா என்பதை ஆராய்கிறது இந்த செய்தி தொகுப்பு.