சிறப்புச் செய்தி

பெண்கள், குழந்தைகளுக்காக 26 புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்படும்: முதலமைச்சர் விஜய் உத்தரவு

3 hours ago 13 பார்வைகள்
பெண்கள், குழந்தைகளுக்காக 26 புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்படும்: முதலமைச்சர் விஜய் உத்தரவு

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

போதைப் பொருள் வழக்குகளை விசாரிக்க 4 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர் ஆகிய இடங்களில் போதைப் பொருள் வழக்கு குறித்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படுகிறது.

நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இந்தப் புதிய சிறப்பு நீதிமன்றங்கள் 46.59 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், விரைவான நீதியை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்