சிறப்புச் செய்தி

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 4 மணிவரை மழைக்கு வாய்ப்பு!

1 hour ago 14 பார்வைகள்
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 4 மணிவரை மழைக்கு வாய்ப்பு!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று (நவ.1) மாலை 4 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வரும்நிலையில், அவ்வப்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

இன்றும் கூட சென்னையின் பல பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்